நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கும் படம் 'லைகர்'. இத்திரைப்படத்தில் அனன்யா பாண்டே, சார்மி, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்டப் பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
'லைகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில், சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் திரைப்படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.