தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லாரன்ஸிடம் சமாதானம் பேசும் இந்திப் பட தயாரிப்பாளர்கள்! - akshay kumar

’லக்‌ஷ்மி பாம்’ படம் குறித்து லாரன்ஸிடம் சமரசம் பேச இந்திப் பட தயாரிப்பாளர்கள் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

laxmmi bomb

By

Published : May 26, 2019, 3:41 PM IST

2011ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் ‘காஞ்சனா’. இந்தப் படத்தை லாரன்ஸ் இந்தியில் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் இத்திரைப்படத்துக்கு ‘லக்‌ஷ்மி பாம்’ என பெயரிடப்பட்டது. சில நாட்களிலேயே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இங்குதான் பிரச்னை ஆரம்பமானது. லாரன்ஸிடம் ஆலோசனை செய்யாமலே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதனால் அவர் படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அக்‌ஷய் குமார் மீதுள்ள மதிப்பால், ‘காஞ்சனா’ கதையை ஒப்படைக்கவும் தயார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

லக்‌ஷ்மி பாம் ஃபர்ஸ்ட் லுக்

கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், துஷார் எண்டெர்டய்ன்மெண்ட், ஷபினா எண்டெர்டய்ன்மெண்ட் ஆகிய பேனர்களில் ஷபினா கான், துஷார் கபூர் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது. லாரன்ஸ் படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டது பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘லக்‌ஷ்மி பாம்’ தயாரிப்பாளர்கள் லாரன்ஸிடம் சமாதானம் பேச சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது. என் தொழிக்கு உரிய மரியாதை அளித்தால், இந்தப் படத்தில் பணிபுரிவேன் என்று லாரன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது இரு தரப்பினரிடைய விறுவிறுப்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details