இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் 'லாபம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கலையரசன், நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, கலையரசன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த படம் விவசாயிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி புரட்சிகரமான படமாக உருவாகவுள்ளது. இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் 'பேராண்மை', 'புறம்போக்கு என்னும் பொதுவுடமை' ஆகிய படங்களில் கம்யூனிச சித்தாந்தத்தை மிக அருமையாக பதிவு செய்திருந்தார். அதேபோன்று இப்படத்திலும் செங்கொடி பறக்கும் வகையான கதையம்சத்தை இயக்க இருக்கிறார்.
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன் நடிக்கும் புதிய படம் - laabam
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
லாபம் படப்பிடிப்பு
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசி, அம்பா சமுத்திரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. 'லாபம்' படத்தின் மூலம் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேர்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு நடிக்கிறார்.
Last Updated : Apr 22, 2019, 3:58 PM IST