விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாஸ்டர்'. விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதில் சஞ்சீவ், சாந்தனு, 96 பட குட்டி ஜானு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் பாடியுள்ள 'குட்டி ஸ்டோரி' பாடல் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இயக்குநர் அருண் காமராஜ் எழுதியுள்ள, அப்பாடலுக்கு ராக் ஸ்டார் அனிருத் இசைமைத்துள்ளார். எதற்காகவும் சோகம் அடையக் கூடாது என்ற வகையில் அமைத்துள்ள இப்பாடலின் வரிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.