தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டி.ராஜேந்தர் வீட்டில் டும் டும் டும்: விஜயகாந்துக்கு அழைப்பு!

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசன் திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.

டி.ராஜேந்தர்

By

Published : Apr 6, 2019, 12:33 PM IST

'சொன்னால்தான் காதலா', 'காதல் அழிவதில்லை', 'அலை' ஆகிய படங்களில் நடித்தவர் குறளரசன். இதனைத்தொடர்ந்து சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும், குறளரசன் இஸ்லாமிய பெண்ணை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. திடீரென இஸ்லாம் மதத்தை தழுவினார்.

இந்நிலையில், குறளரசனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். இவர்களுடன் குறளரசனும் உடனிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details