தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதிய பிஸ்தாவுக்கு கே.எஸ். ரவிக்குமார் வரவேற்பு! - மெட்ரோ ஷிரிஷ்

மெட்ரோ ஷிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்தா’ படத்தின் டீஸர் வெளியானதற்கு கே.எஸ். ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ks ravikumar welomes new pistha
ks ravikumar welomes new pistha

By

Published : Aug 11, 2021, 3:55 PM IST

1997ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘பிஸ்தா’. கார்த்திக், நக்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்தப் படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைவரையும் ஈர்த்தது.

புதிய பிஸ்தாவுக்கு கே.எஸ். ரவிக்குமார் வரவேற்பு!

தற்போது ‘பிஸ்தா’ எனும் அதே பெயரில் மெட்ரோ ஷிரிஷ் நடித்து ஒரு படம் வெளியாகவுள்ளது. யோகி பாபு, சதிஷ், செந்தில் உள்ளிட்டோர் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மெட்ரோ பட எடிட்டர் ரமேஷ் பாரதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கே.எஸ். ரவிக்குமார், புதிய பிஸ்தாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது; படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரோ, ராஜா ரங்கூஸ்கி என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஷிரிஷ். அவரது ‘பிஸ்தா’ படத்தின் டீஸர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இணையத்தில் வைரலாகும் சிம்புவின் ஷூட்டிங் போட்டோ!

ABOUT THE AUTHOR

...view details