தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா குறித்து ரஜினி மக்கள் மன்றத்தினர் விழிப்புணர்வு - Rajini makkal mandram cadres awareness on Coronavirus

கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ரஜினி மக்கள் மன்றத்தினர், முகக்கவசம், கைகழுவும் திரவம், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Rajini makkal mandram cadres distributes masks to public
Rajini makkal mandram cadres create awareness on Coronavirus

By

Published : Mar 21, 2020, 4:57 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் காரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிருஷ்ணகிரியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் காரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியிலுள்ள புதுப்பேட்டை, ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம், கைகழுவும் திரவம், கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். புதுப்பேட்டை பகுதியில் காய்கறி சந்தையிலிருந்து புறப்பட்டு பிரதான சாலை வழிகளாகப் பழையபேட்டை மீன் சந்தை, பூ சந்தை ஆகிய பகுதியில் உள்ளவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

Rajini makkal mandram cadres create awareness on Coronavirus

இது குறித்து மாவட்ட தலைவர் சீனிவாசன் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முகக்கவசம், கிருமிநாசினி பொருள்கள் வழங்கப்பட்டு, கரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

மாவட்ட நிர்வாகமும், மருத்துவர்கள் குழுவும் கரோனா விழிப்புணர்வுப் பணிகளை மிகச்சிறப்பாகச் செய்துவருகிறது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கும், நிர்வாகத்துக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details