ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட (Transilvania International Film Festival) விழாவுக்கு பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள ‘கூழாங்கல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வழங்கும் திரைப்படம் ‘சூழாங்கல்’. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய இத்திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு கவனம் பெற்றது. பின்னர் இப்படத்தை பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இதை மெருகேற்றுவதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். தற்போது இந்தப் படம் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.