அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் 'கூழாங்கல்'. இன்னும் திரைக்கு வராத இந்தப்படம் உலகின் பல்வேறு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வென்று வருகிறது.
அந்த வகையில், நெதர்லாந்தின் 'ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா'வின் உயரிய விருதான ‘டைகர்’ விருதினை வென்றிருருக்கும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
மேலும், நியூயார்க் நகரில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாவான ’New Directors New Films’ விழாவில் இப்படம் முன்னதாகத் திரையிடப்பட்டது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. சர்வதேச அளவில் மிகச்சிறந்த படம் உள்ளிட்ட விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.
’New Directors New Films’ தனது 50ஆவது விழாவை இந்த ஆண்டு கொண்டாடி வரும் நிலையில், உலகின் மிக முக்கியமான திரை விமர்சகர்களில் ஒருவராகக் கருத்தப்படும் ரிச்சர்ட் ப்ராடி, இந்த ஆண்டின் விழாவில் திரையிடப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம் கூழாங்கல் என முன்னதாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நயன்தாரா படம்