தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

16 வருட கோமா வாழ்க்கை : 'கோமாளி' ட்ரெய்லர் வெளியீடு! - ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள 'கோமாளி' படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

komali

By

Published : Aug 4, 2019, 9:22 AM IST

'அடங்கமறு' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியாகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பதினாறு வருட கோமாவில் இருந்து மீண்டு வந்ததை மையப்படுத்தி படம் நகர்கிறது என்று ட்ரெய்லரில் தெரியவந்துள்ளது. நகைச்சுவை கலந்த, காதல் திரைப்படமாகவும், இடையில் சில அரசியலையும் இணைத்துள்ளனர்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் முதல் முறையாக அரசியல்வாதியாக நடித்துள்ளார். படத்தில் பல்வேறு தோற்றங்களில் ஜெயம் ரவி நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details