இப்படம் நயன்தாரா கதாபாத்திரத்தை மையமாகவைத்து உருவாக்கப்படுகின்றது. படத்தின் இயக்குநர் அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி. யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று படத்தின் டிரைலர் வெளியாகிறது.
தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா! - kolaiyuthir kaalam
'ஐரா' படத்தைத் தொடர்ந்து நயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தாண்டு நயன்தாராவின் மூன்றாவது படமாக இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. 'ஐரா' படம் வருகின்ற 28 ஆம் தேதி வெளியாகிறது, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மிஸ்டர் லோக்கல்' படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட்டியலில் 'கொலையுதிர் காலம்' திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்தளிக்க வருகிறார் நயன்தாரா.
இது மட்டுமல்லாமல் 'தளபதி 63' படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துவருகிறார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியானால் நயன்தாரா நடிப்பில் இந்தாண்டின் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.