கன்னட ஹீரோ கிச்சா சுதீப் டோலிவுட் ஹீரோவும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணை மரியாதை நிமித்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு மணி நேர உரையாடல் நீடித்தது. இந்த சந்திப்பின்போது சுதீப் பவன் கல்யாணுக்கு சில மரக்கன்றுகளை பரிசளித்தார். அதுமட்டுமல்லாது அவரது வரவிருக்கும் படங்களுக்கும் வாழ்த்தினார்.
பவன் கல்யாணை சந்தித்த கிச்சா சுதீப்! - பவன் கல்யாணுக்கு மரக்கன்று பரிசளிப்பு
ஹைதராபாத்: பவன் கல்யாணை நடிகர் கிச்சா சுதீப் மரியாதை நிமித்தம் காரணமாக அவரது வீட்டில் சந்தித்தார்.
சந்திப்பு
கரோனா முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி எவ்வாறு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்பது குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.