தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2020, 2:34 PM IST

ETV Bharat / sitara

ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த 'கேஜிஎஃப் சேப்டர் 2' அப்டேட்!

யாஷ் நடிப்பில் உருவாகிவரும் கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் முக்கிய அறிவிப்பை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

KGF
KGF

கன்னட திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியானது 'கேஜிஎஃப்'. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ்(Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது.

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிவருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம், கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக, படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யாஷ் - சஞ்சய் தத்துடன், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் 2 படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "ஒருவழியாக அந்தநாள் வந்துவிட்டது. 'கேஜிஎஃப் சேப்டர் 2' படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உங்கள் அனைவரிடமும் எங்களால் சொல்ல முடிகிற நாள். எங்கள் அற்புதமான ரசிகர்களுக்காக ஒரு சடங்கு போல டிசம்பர் 21 அன்று வழக்கமாக நாங்கள் பின்பற்றும் ஒரு விஷயம். இந்த வருடமும் அது நடக்கும். 21 டிசம்பர் காலை 10.08 மணிக்கு உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவிலிருந்து ஒரு விருந்து. எங்கள் அத்தனை அதிகாரப்பூர்வ பக்களிலும். எப்போதும்போல பொறுமையாக இருந்ததற்கும் எங்களது இந்த பயணத்தில் எங்களுக்கு உறுதியான ஆதரவு தந்ததற்கும் நன்றி" என தெரிவித்துள்ளனர்.

'கேஜிஎஃப் 2' இதுவரை ஃபர்ஸ்ட் லுக், கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக் என வெளியிட்டிருந்த நிலையில், டிசம்பர் 21ஆம் தேதி டீஸர் அல்லது டீஸர் வெளியீட்டு தேதி அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'கேஜிஎஃப்' 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியானது. அதேபோல் கேஜிஎஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details