நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான, ‘கேஜிஎஃப்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தின் டீஸர் யாஷ் பிறந்தநாளன்று வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 6.32 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கரோனா ஊரடங்கிற்கு பிறகு யாஷ் படத்தை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.