தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கேஜிஎஃப் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு - கேஜிஎஃப் 2 படப்பிடிப்பு

2020இல் வெளியாகும் படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றான கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

KGF Chapter 2 release date announced
KGF 2 new poster

By

Published : Mar 13, 2020, 9:38 PM IST

சென்னை: இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் 'கேஜிஎஃப் 2' ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கன்னட மொழியில் வெளியான 'கேஜிஎஃப்' படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி அக்டோபர் 23ஆம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளனர், படக்குழுவினர்.

படம் கன்னட மொழியுடன், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து, #KGFChapter2 என்ற ஹேஷ்டேக்கில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்து இணையவாசிகள் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

கர்நாடகவிலுள்ள கோலார் தங்க வயலை கதைக்களமாக கொண்டிருந்த இப்படத்தின் அதிரடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அத்துடன் இந்தக் கதைகளத்தை வைத்து இதுவரை சொல்லிக்கொள்ளும்படி படங்கள் வெளியாகாத நிலையில், படம் புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியது.

இதனால், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த சண்டைக் காட்சிகளுக்காக படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.

முதல் பாகம் பெற்ற மாபெரும் வெற்றியால், தற்போது அதைவிட மிகப் பிரமாண்டமாக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கன்னட நடிகர் யாஷ், பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த பாகத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை ரவீனா டண்டன், வடசென்னை படத்தில் நடித்த சரண் சக்தி எனப் பலர் புதிதாக இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க:'கேஜிஎஃப் 2' வில் இணைந்த கமல் பட நாயகி

ABOUT THE AUTHOR

...view details