தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2022, 4:05 PM IST

ETV Bharat / sitara

கேஜிஎஃப் 2 - ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’கேஜிஎஃப் - 2’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 - ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கேஜிஎஃப் 2 - ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கன்னட திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'கேஜிஎஃப்'. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய பல்வேறு மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனையை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ்(Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளும் பெற்றது/

இப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றி முத்திரையை பதித்தது. தற்போது ’கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கருடன் கொல்லப்பட்டதற்கு பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் யாஷ் - சஞ்சய் தத்துடன், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு
ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ’கேஜிஎப் - 2’ திரைப்படத்தின் ட்ரைலர் இம்மாதம் 27ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாஸான லுக்கில் அஜித்...ரசிகர்கள் கொண்டாட்டம்...

ABOUT THE AUTHOR

...view details