தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

2022இல் கேஜிஎஃப் 2 நிச்சயம் ரிலீஸ் - நடிகர் யாஷ் உறுதி - சினிமா செய்திகள்

கரோனா பெருந்தொற்று காரணமாக தமாதமாகும் கேஜிஎஃப் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டில் நிச்சயம் ரிலீஸ் ஆகும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் யாஷ்
நடிகர் யாஷ்

By

Published : Aug 22, 2021, 7:03 PM IST

2018ஆம் ஆண்டு திரைக்கு வந்து சக்கைப்போடு போட்ட கன்னட படமான கேஜிஎஃப் (KGF) திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கன்னடம் தாண்டி தமிழ், இந்தி, மலையாளம், தெலங்கு எனப் பல மொழிகளில் கேஜிஎஃப்-க்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

முதல் பாகத்தின் இந்த அபார வெற்றி காரணமாக, இரண்டாம் பாகம் கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

ரிலீஸ் தேதி உறுதி

2021ஆம் ஆண்டே திரைக்குவர இருந்த கேஜிஎஃப்-இன் இரண்டாம் பாகம் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ள நிலையில், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக படத்தின் கதாநாயகன் யாஷ் ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், "இன்றைய அசாதாரண சூழல் காரணமாக தாமதமாகும் படம் உறுதியாக 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும்" எனக் கூறியுள்ளார்.

இப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்குகிறார். சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டான்டன், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க:பாக்ஸிங்கில் ஆர்வம் கொண்ட ஸ்ருதிஹாசன் - Viral Vedio

ABOUT THE AUTHOR

...view details