தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தியேட்டரில் மட்டும்தான் 'கேஜிஎஃப் 2' - கொந்தளிக்கும் ரசிகர்கள் - கொந்தளிக்கும் ரசிகர்கள்

கேஜிஎஃப் 2 தியேட்டர்ல மட்டும்தான் ரிலீஸாக வேண்டும் என சமூக வலைதளங்களில் அதன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தியேட்டரில் மட்டும்தான் 'கேஜிஎஃப் 2'
தியேட்டரில் மட்டும்தான் 'கேஜிஎஃப் 2'

By

Published : Aug 11, 2021, 5:43 PM IST

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம், 'கேஜிஎஃப்'. நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்த இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

சுமார் ரூ.100 கோடி வசூலித்து சாதனை செய்த இப்படம் சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த வரைகலை (Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. ஆனால், படத்தின் வெளியீடு தேதி கரோனா சூழல் காரணமாக தள்ளிப்போனது. இந்த சூழலில், செப்டம்பர் 9ஆம் தேதி 'கேஜிஎஃப் 2' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தியேட்டரில் மட்டும்தான் 'கேஜிஎஃப் 2'

இந்தப் படத்தை திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக இருக்கின்றனர். எனினும் ஓடிடியில் படம் வெளியாகப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனால் கொந்தளித்த ரசிகர்கள், கேஜிஎஃப் 2 தியேட்டர்ல மட்டும்தான் ரிலீஸாக வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மிரட்டலான டீஸரே படத்தை பலருக்கும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.

தியேட்டரில் மட்டும்தான் 'கேஜிஎஃப் 2'

இதையும் படிங்க:விஜய்யை தொடர்ந்து தனுஷும் சொகுசு காருக்கு வரி செலுத்தினார்!

ABOUT THE AUTHOR

...view details