இந்திய சினிமா துறையில் சாதித்தவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகளை இன்று அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழில் சிறந்த படமாக 'பாரம்' என்ற படம் தேசிய விருதை தட்டிச்சென்றது. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை 'கீர்த்தி சுரேஷுக்கு' கிடைத்துள்ளது.
கீர்த்தி சுரேஷுடன் சிறப்பு நேர்காணல் தெலுங்கில் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' படமாக உருவாக்கினர். இதில், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். தற்போது இப்படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதையும் இப்படம் பெறுகிறது.
இது குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், தேசிய விருது கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது. மகாநடி இயக்குநருக்கு நன்றி. என் அம்மா, குடும்பத்தினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.