நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ் இந்தியா’. இயக்குநர் நரேந்திர நாத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நதியா, ராஜேந்திரா பிரசாத், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (அக்.24) வெளியிட்டுள்ளது. எம்.பி.ஏ படித்த பெண் ஒருவர் பிசினஸ் செய்ய விரும்புகிறார். ஆனால் அதற்கு குடும்பத்தினர் மத்தியிலும், சமூகத்தில் இருந்தும் எதிர்ப்பு கிளம்புகிறது. அதிலிருந்து அவர் எப்படி அதை சாதித்து காட்டுகிறார் என்பதே படத்தின் கதை.