சென்னை: கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு இப்போதிருந்தே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். மிகக் குறுகிய காலத்திலேயே தனது நடிப்பு திறமையால் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அதன்பிறகு தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
கீர்த்தி சுரேஷ் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அவர்கள் அக்டோபர் 17ஆம் தேதி வரவுள்ள கீர்த்தி பிறந்தநாளுக்கு இப்போதிருந்தே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கீர்த்தி பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாள் (#KEERTHYBdayCarnivalIn100D) என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கொண்டாட்டங்களை பார்க்க முடியும். ஆனால், கீர்த்தி ரசிகர்கள் அதை பொய்யாக்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க:கே.பி எனது குருநாதர் - ரகுமான் நெகிழ்ச்சி