அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'வேதாளம்'. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகிறது. மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். கடந்த ஒரு வருடமாக இப்படத்தின் ரீமேக் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
இந்நிலையில் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'போலா சங்கர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட் நேற்று (ஆக.22) சிரஞ்சீவி பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. சாய் பல்லவியிடம் இப்படத்திற்குத் தொடர்ந்து 50 நாள்களுக்கு கால்ஷீட் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் கீர்த்தி சுரேஷ், அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.