நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கோவிட் -19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
லேசான பாதிப்புதான் இருக்கிறது. இருப்பினும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
கீர்த்தி சுரேஷுக்கு கரோனா இன்னும் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் பாதிப்பு வருவதற்கு முன்பே எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் நான் மீண்டுவருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:லதா மங்கேஷ்கருக்கு கரோனா பாதிப்பு!