தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விறுவிறுப்புடன் நடந்த படபூஜை - அமெரிக்கா பறந்து செல்லும் கீர்த்தி சுரேஷ் - கீர்த்தி சுரேஷ்

'மகாநடி' படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

கீர்த்தி சுரேஷ்

By

Published : Mar 22, 2019, 3:57 PM IST

தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினிமுருகன் படத்தின் மூலம் பிரபலமானார். இதன் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான 'மகாநடி' படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

'மகாநடி' படத்தில் சாவித்திரியாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்திருப்பார். இப்படத்திற்காக பல விருதுகளையும் அவர் வாங்கினார்.தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வசூல் ரீதியாகவும் அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், அடுத்ததாககீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் நரேந்திரநாத் இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக உருவாகும் கீர்த்தி சுரேஷின் 20 வது படத்தின் பூஜை ஐதராபாத்தில் தொடங்கியது.

நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இப்படத்தை ஈஸ்ட் கோஸ்ட் புரொடெக்சன்ஸ் சார்பில் மகேஷ் எஸ் கோனெரு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அமெரிக்காவில் நடைபெறுவதால். இதற்காக மே மாதம் கீர்த்தி சுரேஷ் அமெரிக்கா செல்கிறார். இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details