தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் கயல் சந்திரனுக்கு வளைகாப்பு நடத்தும் மிர்ச்சி விஜய்...!

நடிகர் கயல் சந்திரன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் இணையத்தை கலங்கடித்து வருகிறது.

நான் செய்த குறும்பு

By

Published : Apr 1, 2019, 12:17 PM IST

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் பிரபலமானவர் சந்திரன். இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி', 'டாவு', 'நான் செய்த குறும்பு' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் கயல் சந்திரன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அது'நான் செய்த குறும்பு' படத்தின் போஸ்டர் என்பது தெரியவந்துள்ளது. அந்த போஸ்டரில், மாசமாக இருக்கும் சந்திரனுக்கு நடிகை அஞ்சு குரியன் வளைகாப்பு நடத்துகிறார். அவரது பக்கத்தில் மிர்ச்சி சிவா கத்தியை வைத்து மிரட்டுவதுபோல் இருக்கிறது.


தமிழ் கலாசாரத்தில் பெண் மாதமாக இருந்தால் வளைகாப்பு நடத்துவது வழக்கம். எனவே இதில் ஆணுக்கு நடப்பதுபோல் இருந்ததால் நெட்டிசன்கள் பதறி போயுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details