தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லதாவைத் தொடர்ந்து பாரதிராஜாவை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி!

சென்னை: "தமிழ், தமிழர் கலாசாரம் என்று பேசிவிட்டு, தன்னுடைய படங்களுக்கு வடநாட்டில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்தவர் இயக்குநர் பாரதிராஜா" என்று, நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி

By

Published : Apr 16, 2019, 1:53 PM IST

Updated : Apr 16, 2019, 2:19 PM IST

குட் சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் ‘முடிவில்லா புன்னகை’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகை கஸ்தூரி,

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற அடைமொழி எம்ஜிஆருக்கும் பொருந்தும். கடந்த வாரம் என்னுடைய ட்விட்டர் பதிவால் சர்ச்சைகள் எழுந்தது அப்பொழுது எதிர்ப்புகள் எழுந்தாலும் பலர் தொலைபேசி மூலமாக தங்கள் ஆதரவை எனக்கு தெரிவித்தனர். அப்பொழுதுதான் உணர்ந்தேன். செத்தும் என்னை காத்தார் தலைவர் எம்ஜிஆர்.

முடிவில்லா புன்னகை விழாவில் கஸ்தூரி

சினிமா சாக்கடை என பலர் விமர்சனம் செய்தபோது, என் தந்தைதான் எனக்கு ஆதரவு கொடுத்தார். பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. சில வீடுகளில் அதை கணவர் கொடுத்தாலும், முதலில் ஆரம்பிப்பவர்கள் தந்தைகளே. மனைவி கண்ணகியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கூட, மகள் கல்பனா சாவ்லா ஆக வேண்டும் என நினைப்பவர்கள்தான் தந்தையர். பெண்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட இலக்கணம், வரைமுறைகள் மற்றும் குறுகிய வட்டத்தை உடைத்தெறிந்து வெளிவந்த அவ்வையார், மதர் தெரசா, ஜெயலலிதா ஆகியோர் மிகப்பெரிய ஆளுமைகளாகத் திகழ்ந்தனர்.

இப்போதெல்லாம் மாநிலத்தின் முதலமைச்சர்கள்கூட இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு இங்கு இரண்டு நாள், அங்கு இரண்டு நாள் என்று போய்க் கொண்டு இருந்ததை நாம் பார்த்தோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு சமத்துவம் வேண்டாம். ஒரு கணவரை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை. தமிழ் கலாசாரம் என்று பேசும் இயக்குனர்கள் கூட தமிழ் படம் எடுக்க வேண்டும் என்றால் வடநாட்டில் இருந்து தான் பெண்களை இறக்குமதி செய்கின்றனர். இதற்கு உதாரணம் என்றால் இயக்குனர் பாரதிராஜாதான். முதன்முதலில் வட இந்தியாவிலிருந்து கதாநாயகிகளை இறக்குமதி செய்வதில் முன்னோடியாக உள்ளார், என்றார்.

Last Updated : Apr 16, 2019, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details