தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இனி நான் போலீசு - கலகலக்க வைக்கும் கஸ்தூரி - கிரண்பேடி

நடிகை கஸ்தூரி காவல் துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படமான 'இ.பி.கோ 302'ன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நடிகை கஸ்தூரி

By

Published : Apr 24, 2019, 5:00 PM IST

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் நடிகை கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் 'இ.பி.கோ 302'. இதில் நடிகை கஸ்தூரி 'துர்கா ஐ.பி.எஸ்.' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின்செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நடிகை கஸ்தூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் பேசுகையில், 'ஒரு ஹீரோவுக்கு கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று படுகொலை வழக்குகளின் சிக்கல்களை கூறும் படம்.

அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ்.தான் கஸ்தூரி. படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது' எனக் கூறினார்.

இயக்குநரைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி பேசுகையில், 'காவல் அலுவலராக நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. படத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. சாமி, சிங்கம் போல மாஸ் காவல் துறை படமாகத்தான் இருக்கும்.

நிஜ வாழ்க்கையில் நம் கிரண்பேடி போன்ற ஒரு ரோல். இந்த படத்திற்கு பிறகு காவல் அலுவலர் கதாபாத்திரத்துக்கு என்னை அழைப்பார்கள் என நினைக்கிறேன்' என்றார்.

நடிகை கஸ்தூரி

ABOUT THE AUTHOR

...view details