தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கார்த்திக் சுப்பராஜ் - தனுஷ் கூட்டணி இம்மாத இறுதியில் - dhanush

'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுப்பராஜ் -தனுஷ்

By

Published : Jul 9, 2019, 3:08 PM IST

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு பீட்சா கொடுத்த அறிமுக வெற்றிக்கு பிறகு 'ஜிகர்தண்டா' திரைப்படம் தேசிய விருது வென்று பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கிய இறைவி, மெர்க்குரி சுமாரான வசூலை பெற்றன. ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தார்.

அதேபோன்று 'பேட்ட' படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இ்ப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. ரஜினிகாந்த் வாயால் கார்த்திக் சுப்பராஜ் திறமையான இயக்குநர் என்ற பெயரும் பெற்றார். பேட்ட படத்தின் வெற்றி களிப்பில் இருக்கும் கார்த்திக் சுப்பராஜ், மாமனாரை தொடர்ந்து மருமகன் தனுஷை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க இருப்பதாக 2017ஆம் ஆண்டே பேச்சுவார்த்தை நடந்தது. இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ. அல்பசினோ ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் முயற்சி செய்தார். ஆனால் முயற்சிகள் வீண் ஆனது. அதன்பிறகு ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். இந்நிலையில், கதைத்தேர்வு முடிவுபெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. டெஜன் கணக்கில் புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் தனுஷ் 2022 வரை பிஸியாக இருப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details