'கைதி' படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 'பாபநாசம்' படத்தை அடுத்து ஜீத்து ஜோசப் தமிழில் இயக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணி ஜோதிகாவுடன் முதல்முறையாக நடிக்கும் கார்த்தி! - ஜீத்து ஜோசப்
நடிகர் கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
poster
இன்று படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
ஜோதிகாவுடன் நடிப்பது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் கார்த்தி, “அண்ணியுடன் முதல் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது த்ரில்லாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.