தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெரியார் கருத்துக்கு விளக்கம் கொடுத்த 'காப்பான்' சூர்யா - காப்பான்

சென்னை: காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் துப்பாக்கியை சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்று பெரியார் கூறியதை, காப்பான் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் சூர்யா சுட்டிக்காட்டி பேசினார்.

suriya

By

Published : Sep 16, 2019, 5:16 PM IST

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் காப்பான். இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை, தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில், இயக்குனர் கே.வி.ஆனந்த், நடிகர் சூர்யா, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், நடிகை சாயிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சூர்யா பேசுகையில், யாரோ ஒரு முன்னணி நடிகருக்கு தயாரான கதை சூழ்நிலை காரணமாக எனக்கு வந்து சேரும். அப்படி வந்த படங்கள் எனது கேரியரில் வெற்றி படமாக அமையும். எஸ்.பி.ஜி. அலுவலர்களுடன் 4 நாட்கள் இருந்தேன். அவர்கள் பார்க்க சாதாரணமாக தான் இருப்பார்கள். ஆனால் பணி என்று வந்துவிட்டால் உயிரை விட தயாரக இருப்பார்கள். இது என்னை ஆச்சிரியப்படுத்தியது. அதே போல விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்களும் எங்களுக்கு வழிக்கட்டினார், அவருக்கும் நன்றி.

காப்பான் இசை வெளியீட்டுவிழாவில் பேசும் சூர்யா

கோட்சே, காந்தியை கொன்றதுக்கு பிறகு பல கலவரங்கள் நடந்தன. அனைவரும் கோட்சே மீது கோவமாக இருந்த நிலையில் பெரியார் மட்டும் கோட்சே பயன்படுத்திய துப்பாக்கியை சுக்கு நூறாக உடைக்க சொன்னார்.

அதை கேட்டவர்கள் கோட்சேவை பற்றி பேசினால் துப்பாக்கியை பற்றி பேசுகிறீகள் என பெரியாரிடம் கேட்ட போது, கோட்சேவும் வெறும் துப்பாக்கி தான் என சொன்னாரம். ஒரு கருத்தியல் எவ்வாறு செயல்படும் என்பதை சுலபமாக சொல்லி சென்றார். அதே போல கருத்தியல் ரீதியான கதை இது.

நீங்க பேனர் வைத்து தான் உங்களை பற்றி எனக்கு தெரியவேண்டும் என்பதில்லை, ரசிகர்கள் செய்கிற ரத்த தானம், பள்ளிகளுக்கு செய்கிற உதவிகள் எனக்கு தெரியும். எனவே உங்கள் ஊர்களில் என்ன தேவை இருக்கிறதோ அதை செய்து கொடுங்கள் என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details