தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கிராமி விருதின் மீது சிறுநீர் கழித்த பாப் இசை பாடகர் - கன்யே வெஸ்ட் சிறுநீர் கழிக்கும் வைரல் வீடியோ

லாஸ் ஏஞ்சல்: பிரபல பாப் இசை பாடகர் கன்யே வெஸ்ட் கிராமி விருதின் மீது சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

கன்யே வெஸ்ட்
கன்யே வெஸ்ட்

By

Published : Sep 18, 2020, 12:39 AM IST

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகர் கன்யே வெஸ்ட். இவர் சமீபத்தில் தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்றும், ட்ரம்புக்கு எதிராகப் போட்டியிடப்போவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதேபோல் நடிகையும், தனது மனைவியுமான கிம் கர்தாஷியனை விவாகரத்து செய்யப்போவதாகவும் பதிவு வெளியிட்டுவிட்டு உடனே நீக்கிவிட்டார். இதற்கு கிம் கர்தாஷியன், கன்யேவுக்கு பைபோலார் டிஸார்டர் (Bipolar disorder) இருப்பது தெரியும் என்று நினைக்கிறேன். இந்த நோய் இருப்பவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்களைப் புரிந்துகொள்வது எவ்வளவு சிக்கலானது மற்றும் வேதனையானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கன்யே ஒரு புத்திசாலி, ஆனால் சிக்கலான நபர். அவர் தனது தாயின் இழப்பை அனுபவித்திருக்கிறார். அவரது பைபோலார் டிஸார்டர் அதிகரிக்கும் போது மன அழுத்தம் மற்றும் தனிமை ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் சிரமப்படுவார் என்று கூறினார்.

இதையடுத்து தற்போது, கன்யே வெஸ்ட் இசை உலகின் ஆஸ்கரான கிராமி விருதை, கழிவறை கோப்பைக்குள் போட்டு சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு கன்யே வெஸ்ட், "என்னை நம்புங்கள் நான் நிறுத்த மாட்டேன்" என தலைப்பிட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக கன்யே வெஸ்ட் தனது பாடல் இசை உரிமை பெறுவதற்கு போராடி வருகிறார். இதைக் குறிக்கும் வகையில் இந்த வீடியோவை தற்போது பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இங்கே யுனிவர்சல் மியூசிக் உடனான 10 ஒப்பந்தங்கள் உள்ளது. இவற்றைப் பார்க்க எனக்கு உலகில் உள்ள ஒவ்வொரு வழக்கறிஞர்களும் தேவை. நீங்கள் ஒரு இசை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது உங்களது உரிமைகளை விற்கவும் கையொப்பம் இடுகிறீர்கள்.

என் எஜமானர்களுக்கு என்ன விலை என்று சொல்லமாட்டேன், ஏனென்றால் நான் அவற்றை வாங்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். எஜமானர்கள் இல்லாமல் உங்கள் சொந்த இசையால் எதுவும் செய்ய முடியாது. வேறு யாரோ எங்கிருந்தோ நம்மளை ஆட்டிப்படைக்கின்றன” என்று கூறினார்.

இவர் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details