தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பீஸ்ட், கேஜிஎஃப் - மோதலா? - நடிகர் யாஷ் விளக்கம் - Sivarajkumar sanjay datt

நடிகர் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கன்னட நடிகர் யாஷ் நடித்த KGF 2ம் பாகம் ஆகிய இரண்டு படங்களும் ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகிறது. எனினும் இரு படங்களையும் கண்டிப்பாக திரையரங்கில் பார்ப்பேன் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் Vs  கேஜிஎஃப் இல்லை - பீஸ்ட்டுடன் மோதல் குறித்து யாஷ்!
இது தேர்தல் கிடையாது - பீஸ்ட்டுடன் மோதல் குறித்து யாஷ்!

By

Published : Mar 28, 2022, 4:04 PM IST

Updated : Mar 28, 2022, 5:11 PM IST

பெங்களூரு:யாஷ், இந்தி நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், கே.ஜி.எப் சாப்டர் 2. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். யாஷ், சஞ்சய் தத், பிருத்விராஜ், சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் யாஷ், ‘ஒரே நேரத்தில் கே.ஜி.எப் 2 படமும் விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாவதால், கே.ஜி.எப் vs பீஸ்ட் என நினைக்க வேண்டாம். கே.ஜி.எப் மற்றும் பீஸ்ட் என்றே நினைப்போம். ஏனென்றால் இது தேர்தல் அல்ல. ஒருவர் ஒரு ஓட்டுதான் போட வேண்டும் என்று. தேர்தலில் ஒருவர் வெற்றி பெறுவதும் மற்றொருவர் தோல்வி அடைவதையும் தவிர்க்க முடியாது. ஆனால், இது சினிமா. ரசிகர்களுக்கு இரண்டு படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.

எட்டு மாதங்களுக்கு முன்பே நாங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம். விஜய் படத்துக்கும் அந்த தேதி முக்கியம். அதனால் அவர்கள் முடிவும் நியாயமானதுதான். தனிப்பட்ட முறையில் நான் அவர் ரசிகனாக இருக்கிறேன். அவர் பல ஆண்டுகளாக உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அவருடைய படத்தை அனைவரும் கொண்டாடுவோம்.

இது தேர்தல் கிடையாது - பீஸ்ட்டுடன் மோதல் குறித்து யாஷ்!

அவர் ரசிகர்களும் கே.ஜி.எப் படத்தை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். போட்டி சிந்தனைகளைத் தள்ளி வைத்துவிட்டு, சினிமாவை கொண்டாட வேண்டிய நேரம் இது'' என்றார்.நடிகர் யாஷ் கூறிய இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் இந்தி நடிகர் சஞ்சய் தட்

இதையும் படிங்க:ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த நடிகை, துணை நடிகை

Last Updated : Mar 28, 2022, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details