சமீபத்தில் யூ-ட்யூப் தளத்தில் Theatre D சேனலில் வெளியாகியுள்ள, 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' எனும் இந்நிகழ்ச்சி வரலாற்றை 'கதை சொல்லல்' முறையில் சொல்வதில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரித்துள்ளார், இயக்குநர் திரு.
இதுகுறித்து கனி கூறுகையில், 'எனது பால்ய காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிகவும் பிடித்த பாடம். வரலாற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த வகையில், மிகப்பெரும் கூட்டத்திற்கு வரலாற்றை கதை வடிவில் சொல்ல முடியும் என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இப்படித்தான் இந்த ஐடியா தோன்றியது. முன்பு பெரியவர்கள் எந்த ஒரு கதையையும் சிறுவர்களுக்குச் சொல்லும் போது, 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' எனத்தான் ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் இந்நிகழ்ச்சியின் தலைப்பும் அமைந்தது.
நான் வரலாற்றின் வழி ஒழுக்கத்தை கற்றுத்தரவே நினைக்கிறேன். வரலாற்றின் மூலம் நாம் அனைவரும் ஒழுக்கத்தைக் கற்றுப் பயன்பெறலாம். நம் நிலத்தின் வரலாற்றையும் மூதாதையர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதன் மூலம், நமது தென்னிந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மூலம் நமது கடந்த காலத்தைக் கற்றுக்கொள்வதன் வழியே, நாம் பல நல்ல விசயங்களை கற்று, நமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். எனவே, தான் நான் நமது இந்திய வரலாற்றைத் தேர்ந்தெடுத்தேன்' என்றார்.