நாட்டில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தலைவி பட நடிகை கங்கனாவுக்கு கரோனா - கங்கனா படங்கள்
சென்னை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைவி பட நடிகை கங்னாவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு சில நாள்களாக சோர்வாகவும், பலவீனமாகவும் இருந்தது. கொஞ்சம் கண் எரிச்சல் இருந்தது.
இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதனால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன். இதற்காக அச்சப்பட தேவை இல்லை. இது ஒரு சிறிய காய்ச்சல் தவிர வேறு ஒன்றும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.