தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளிநாட்டில் ஷுட்டிங்... குடும்பத்தை கையோடு அழைத்து சென்ற கங்கனா - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

வெளிநாட்டில் பிஸியாக படப்பிடிப்பில் இருக்கும் நடிகை கங்கனா தனது குடும்பத்தை உடன் அழைத்து சென்றிருக்கிறார்.

கங்கனா
கங்கனா

By

Published : Aug 10, 2021, 11:54 AM IST

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது தகாட் (Dhaakad) என்ற பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மத்தியப் பிரதேசத்தில் நடந்துமுடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

குடும்பத்துடன் நேரம்

படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவர் தனது குடும்பத்திற்காக நேரத்தைச் செலவு செய்ய விரும்பினார். இதனால் அவரது சகோதரி ரங்கோலி மற்றும் ரங்கோலியின் மகன் பிருத்வி ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

குடும்பத்தை கையோடு அழைத்து சென்ற கங்கனா

படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் புடாபெஸ்டில் உள்ள கஃபே ஒன்றில் குடும்பத்துடன் அவர் உணவு சாப்பிடும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தலையில் தொப்பி, கலர் கண்ணாடி என ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கங்கனா

தலைவி

இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கி, கங்கனா நடித்துள்ள, 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், திரையரங்குகள் முழுமையாக திறக்காத காரணத்தினால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காலில் கட்டுடன் உள்ள யாஷிகாவின் புகைப்படம் லீக்

ABOUT THE AUTHOR

...view details