தமிழ், தெலுங்கு போன்ற மொழிப் படங்களில் நாயகியாக நடித்து வருபவர், நடிகை கங்கனா ரணாவத். எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் கங்கனா, தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார். அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு சிலரோ கங்கனா பாஜக கட்சியில் இணையப் போகிறார் என்று வதந்தி பரப்பினர்.
இந்நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவித்து நடிகை கங்கனா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.