நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து கருத்துத் தெரிவித்து வந்த நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் மும்பை நகரத்தையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதனைத்தொடர்ந்து, மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கங்கனாவின் அலுவலகத்தில் பல பகுதிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி மாநகராட்சி இடித்துத் தள்ளியது.
மகாராஷ்டிரா ஆளுநரை நேரில் சந்தித்த கங்கனா ரணாவத்! - ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி
நடிகை கங்கனா ரணாவத், நேற்றுமகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், நடிகை கங்கனா மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்று சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தனது அலுவலக கட்டடத்தின் ஒரு மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது குறித்தும் மாநில அரசுடன் நிலவி வரும் மோதல் குறித்தும் கங்கனா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் எடுத்துரைத்தார்.
பிறகு இதுகுறித்து பேசிய கங்கனா, “ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து நான் எனக்கு நடந்த அநீதி குறித்துக் கூறினேன். அவரிடம் கூறிய பிறகு எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அனைத்து குடிமக்களும், இளம் பெண்களுக்கும் இந்த சட்டதிட்டம் நடைமுறைகள் மீதான நம்பிக்கை இருக்கும். நான் சொல்வதை அவரது மகள் சொல்வது போல் கேட்டறிந்தார்" என்று கூறினார்.