தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாஜகவை சீண்டுகிறாரா கங்கனா ரணாவத்? - கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய வேலை வாய்ப்பின்மை தினம் என்று பதிவிட்டுள்ளார்.

கங்கனா
கங்கனா

By

Published : Sep 17, 2020, 10:35 PM IST

நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்து வந்த நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் மும்பை நகரத்தையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதனைத்தொடர்ந்து, மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கங்கனாவின் அலுவலகத்தில் பல பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி மாநகராட்சி இடித்துத் தள்ளியது.

இதுகுறித்து கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய கனவு, எதிர்காலம், சுய மரியாதை என்று நான் கருதிய எனது அலுவலகத்தை இடித்தது என்னை பாலியல் வன்புணர்வு செய்தது போல் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,இன்று (செப்.17) மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய வேலை வாய்ப்பின்மை தினம் (#NationlUnemploymentDay17Sept) என்ற ஹேஷ்டாக்கை காங்கிரஸ்டிரெண்ட் செய்தது.

இதை ஆதரிக்கும் வகையில் நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய வேலைவாய்ப்பின்மை தினம் என்ற ஹேஷ்டாக்கை பதிவை செய்து காங்கிரஸ் பக்கத்தை டாக் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்கனா பாஜகவில் இணையபோகிறார் என்று செய்தி வெளியான நிலையில், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் கங்கனா பாஜகவை சீண்டும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details