தமிழ் ரசிகர்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் இயற்றியப் பாடல்கள் தற்கால மனிதர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒத்துப் போவதால் அவர் இன்றும் அனைவராலும் போற்றப்படுகிறார்.
புகழையும் தமிழையும் போற்றிடும் தமிழ்: கண்ணதாசனை நினைவுகூரும் கமல் - கண்ணதாசன் பிறந்தநாள்
சென்னை: கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், ”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்று அவர் எழுதியது போலவே இன்றும் அனைவரது மத்தியிலும் தனது வரிகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இன்று 93ஆவது பிறந்தநாள் ஆகும். இதனையொட்டி கண்ணதாசனை நினைவுகூரும் பலரும், அவரது பாடல்களை புகழ்ந்தும் வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “செப்பிடும் நற்றமிழை செவிவழி எனக்கீந்த செவிலித்தாய் முத்தைய்ய மாமணி பிந்தைய காலத்தில் பாடவந்தோர் பற்றிய பாட்டை பாட்டுடைத் தலைவன் எனினும் கண்ணனுக்கு தாசன் பிறந்து வந்து பாடியதால் இறந்ததை மன்னித்து இனியென்றும் இறவாதும் புகழையும் தமிழையும் போற்றிடும் தமிழ்” என பதிவிட்டுள்ளார்.