தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எம்எஸ்வி, கண்ணதாசன் - போற்றிப் பாடிய கமல்ஹாசன் - எம்.எஸ். விஸ்வநாதன்

திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் . இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவின் பொக்கிஷங்கள் என கமல் குறிப்பிட்டுள்ளார்.

Kamal tweet kannadhasan
Kamal tweet kannadhasan

By

Published : Jun 24, 2021, 2:58 PM IST

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இருவருக்கும் இன்று (ஜூன் 24) பிறந்தநாள். அவர்களின் நினைவைப் போற்றி திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனும் தனது வாழ்த்து செய்தியை பதிவு செய்திருக்கிறார்.

கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் . இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி.. என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட பல படங்களில் எம்ஸ்வி, கண்ணாதசன் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:'அழகிய கண்ணே' படத்தில் பாடல் பாடிய ஜி.வி. பிரகாஷ்

ABOUT THE AUTHOR

...view details