நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதனால் சில நாள்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியை, ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதனையடுத்து மீண்டும் உடல்நலம் குணமடைந்து திரும்பிய கமல், பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி, விக்ரம் படப்பிடிப்பு உள்ளிட்டவற்றிலும் கலந்து கொண்டார்.