தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்ரீபிரியா குறும்பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்ட கமல் ஹாசன் - kamal hassan released sri priya's Yashodha first look video

சென்னை: ஸ்ரீபிரியா இயக்கியுள்ள 'யசோதா' குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீபிரியா
ஸ்ரீபிரியா

By

Published : May 14, 2020, 11:21 PM IST

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். எப்போதும் பிஸியாக இருந்த பிரபலங்கள், வீட்டில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று ரசிகர்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகை ஸ்ரீபிரியா தான் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளதாகவும்; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். 'யசோதா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீபிரியா, நாசர் மற்றும் சிவகுமார் இணைந்து உருவாக்கியுள்ளனர். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது ஒரு சிறப்பான முயற்சி. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை ரிலீஸ் செய்வதில் பெருமைப்படுகிறேன். விரைவில் இந்த குறும்படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'- சமையலில் களமிறங்கிய சிம்பு!

ABOUT THE AUTHOR

...view details