சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. இதில் விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், ஜகபதி பாபு, அனுஷ்கா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொனிடெலா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவி கேட்டுக் கொண்டதற்கிணங்க ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்துக்கு கமல்ஹாசன் ஒரு உதவி புரிந்துள்ளார்.
ஒரே ஒரு ஃபோன் கால்தான் - மறுக்காமல் சம்மதம் தெரிவித்த கமல்ஹாசன்! - சிரஞ்சீவி
சிரஞ்சீவி கேட்டுக் கொண்டதற்கிணங்க ‘சைரா நரசிம்ம ரெட்டி’ கதையை நமக்கு கமல்ஹாசன் எடுத்துரைக்கவுள்ளார்.
Sye raa Narasimha Reddy
சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை கமல்ஹாசன் தமிழில் எடுத்துரைக்கவுள்ளார். இதற்காக சிரஞ்சீவி ஃபோன் செய்து பேசியதற்கு, எந்தவித மறுப்பும் சொல்லாமல் கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல் மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் பவன் கல்யாணும் இந்தக் கதையை எடுத்துரைக்கிறார்கள்.
இதையும் படிங்க: இது முதல் அப்டேட் - ‘தளபதி 64’ களத்தில் விஜய் சேதுபதி!