சில வருடங்களுக்கு முன்பு ஒரு சேரி பையனின் கடிதம் என்ற தலைப்பில் கமல்ஹாசனுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ‘தேவர் மகன்’ படத்தின் உருவாக்கமும் ’போற்றிப் பாடடி பொண்ணே’ பாடலின் உருவாக்கமும் ஒரு பிரிவு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அப்போது உச்சத்திலிருந்த கமல்ஹாசனுக்கு மாரி செல்வராஜ் என்ற இளைஞன் எழுப்பிய கேள்வி செவி சேரவில்லை போலும், கமலிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
மாரி செல்வராஜ் கடிதத்துக்கு பதில் - போற்றிப் பாடிய வாயால் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன் - மாரி செல்வராஜ்
’தேவர் மகன்’ பாடல் உருவாக்கியதற்காக கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
Kamal Haasan apologise for thevar magan
தற்போது ‘தேவர் மகன்’ பாடல், படத்தின் உருவாக்கம் குறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இனி ‘தேவர் மகன் 2’ எடுத்தாலும் அதற்கு தேவர் மகன் என பெயர் வைக்கமாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு அரசு விருது