இந்தியில் தேவ் டி, கல்லி பாய், யெ ஜவானி ஹெய் திவானி என பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின். இவர் சமீபத்தில் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
இவரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹெர்ஸ்பெர்க் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை கல்கி கோச்சலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.