'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் தற்போது ஜீவா - அருள்நிதியை வைத்து 'களத்தில் சந்திப்போம்' என்னும் புதிய படத்தை இயக்கியுள்ளார். நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
புதிய வெளியீட்டு தேதியுடன் 'களத்தில் சந்திப்போம்'
சென்னை: ஜீவா - அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'களத்தில் சந்திப்போம்' திரைப்படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
kalathil
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரித்துள்ள இந்தப் படம் காமெடி கலந்த குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ளது. இப்படமும் கரோனா காரணமாக நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்துவந்தது.
இந்நிலையில், ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசத்தன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தின் ரிலீஸை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.