தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நட்சத்திரங்கள் லாக்டவுனில் என்ன செய்கிறார்கள்? - காஜல் வெளியிட்ட வீடியோ! - cinema news

டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு நேரத்தை செலவு செய்கின்றனர் என்று ரசிகர்களுக்கு காணொலி காட்சி மூலம் தெரிவித்துள்ளனர்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

By

Published : May 10, 2020, 4:34 PM IST

ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருந்த திரையுலகினர், கிட்டத் தட்ட 47 நாள்களாக வீட்டில், தங்களது குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகர், நடிகைகள் அடிக்கடி கரோனா வைரஸ் குறித்து தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் லாக்டவுன் நேரத்தில் எவ்வாறு நேரத்தைச் செலவு செய்கின்றனர் என்பதை தங்கள் ரசிகர்களிடம், காணொலி மூலம் தெரிவித்துள்ளனர். அதற்கு நடிகர் ராணா பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

அந்த காணொலியில், சுமார் 31 டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், பாடகர்கள், யூடியூப் பிரபலங்கள் நடித்துள்ளனர். 'unlock your heart' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:’ஒரு ரூபாய் சம்பளமாக கொடுத்தால் போதும்’- பிக் பாஸ் ஆர்த்தி

ABOUT THE AUTHOR

...view details