தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்களுக்கு தித்திக்கும் இனிப்பு கொடுத்த காஜல் அகர்வால்! - ஜெயம் ரவி

நடிகை காஜல் அகர்வாலின் படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகளால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

Kajal aggarwa

By

Published : Jul 30, 2019, 1:06 PM IST

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இயங்கி வருகிறது. இவர் தற்போது தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை உள்ளிட்ட ஒன்பது வேடங்களில் நடிப்பதாக முன்னர் தகவல் வெளியானது.

ஆனால் தற்போது நான்கு அல்லது ஐந்து வேடங்கள் மட்டுமே படத்தில் இருப்பதாகவும், மீதி படத்தின் புரேமோஷனுக்காக பயன்படுத்தியதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இப்போது படத்தின் நாயகி காஜல் அகர்வாலின் ஆதிவாசி கெட்டப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஆதிவாசி காஜல் அகர்வால்

அதே போன்று தெலுங்கில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் நடிகர் சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் `ரணரங்கம்` படத்திலும் காஜல் அகர்வால் கதநாயகியாகவும் நடித்துவருகிறார். இப்படத்திலிருந்து வெளியான பாடல் ஒன்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. நடிகர் சர்வானந்த் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details