நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக வேறொரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிப்பு தவிர சமூகப் பணிகளை செய்து வரும் காஜல் அகர்வாலை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்த காஜல் அகர்வால் - பள்ளிக்கூடம்
பிரபல நடிகை காஜல் அகர்வால் ஆந்திராவில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அரக்கு என்ற பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பள்ளிக்கூடம் ஒன்றை அவர் கட்டிக்கொடுத்துள்ளார். இதுகுறித்து தெரிவித்தகாஜல் அகர்வால்,'அரக்கு பகுதியில் குடியிருக்கும் பழங்குடியின குழந்தைகள் கல்வியறிவு இல்லாமல் இருக்கின்றனர். அங்கு கல்வி கற்றுக்கொள்வதற்கு பள்ளிக்கூடம் இல்லாத சூழலைக் கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது.பிறகு எனது நண்பர்களின் உதவியோடு நன்கொடை பெற்று பள்ளிக்கூடம் கட்டினேன். இது சிறிய உதவிதான் ஆனால் மனதிற்கு திருப்தி அளிக்கிறது' எனக் கூறியுள்ளார்.
தற்போது, அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.