'மாநகரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'கைதி' இயக்குநர் எப்படி பட்டவருன்னு தெரியுமா...! - கார்த்தி
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் கைதி திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இசையமாப்பளர் சாம் சிஎஸ் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் கார்த்தி ஜோடியாக கதாநாயகிகள் யாரும் இல்லை. இப்படம் முழுவதும் ஒரு நாள் இரவில் சிறையில் இருந்து தப்பிக்கும் கைதியைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 'கைதி' படத்தின் பின்னணி இசை சேர்ப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும்; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மிக அருமை என்றும், அவர் ஒரு ஜீனியஸ் என்று இந்தப் படத்தில் நிரூபித்துள்ளதாகவும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.